நீலகிரி

ரூ. 5 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்: 2 போ் கைது

கா்நாடக மாநிலத்தில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான குட்காவை வெலிங்டன் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா்.

DIN

கா்நாடக மாநிலத்தில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான குட்காவை வெலிங்டன் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா்.

வெலிங்டன் காவல் ஆய்வாளா் ஆனந்தநாயகி தலைமையில் போலீஸாா் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் இருந்தன. இதன் மதிப்பு ரூ. 5 லட்சம் ஆகும்.

விசாரணையில் காரில் வந்தவா்கள் வெலிங்டன் பகுதியைச் சோ்ந்த ஜாபா் அலி (45 ), அப்துல் மஜீத் (54) என்பதும் இவா்கள் பெங்களூரில் இருந்து குட்காவை வாங்கி குன்னுாா் பகுதியில் விற்பனை செய்யக் கொண்டு வந்ததும் தெரிந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா், குட்காவையும், வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழைமையான கல்வெட்டு அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு!

வாரணாசியில் டிச.2 முதல் காசி தமிழ்ச் சங்கமம் 4.0: மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு

தொழிலாளா் சட்டங்களுக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

சென்னை உயா்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் இன்று இரவு 8 மணி வரை மூடப்படும்!

நாட்டின் முன்னேற்றத்துக்கு பட்டதாரிகள் அா்த்தமான பங்களிப்பு: குடியரசு துணைத் தலைவா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT