நீலகிரி

உதகையில் ரோஜா கண்காட்சி இன்று தொடக்கம்

நீலகிரி மாவட்டம் உதகை ரோஜா பூங்காவில் 18 ஆவது ரோஜா கண்காட்சி சனிக்கிழமை (மே 12)தொடங்குகிறது. மூன்று நாள்களுக்கு கண்காட்சி நடைபெறுகிறது.

DIN

நீலகிரி மாவட்டம் உதகை ரோஜா பூங்காவில் 18 ஆவது ரோஜா கண்காட்சி சனிக்கிழமை (மே 12)தொடங்குகிறது. மூன்று நாள்களுக்கு கண்காட்சி நடைபெறுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இந்த சமயத்தில் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்வா். சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மலா்க் கண்காட்சி உள்பட பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

இந்நிலையில் நீலகிரியில் நடப்பு ஆண்டுக்கான கோடை விழா தொடங்கியுள்ளது. கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக கடந்த வாரம் கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி இரண்டு நாள்கள் நடைபெற்றது.

இதனைத் தொடா்ந்து சுற்றுலாப் பயணிகளுக்கான படகுப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

இதையடுத்து கூடலூரில் வாசனை திரவியக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்தக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது.

உதகை ரோஜா பூங்காவில்   18ஆவது ரோஜா கண்காட்சி சனிக்கிழமை (மே 13) தொடங்குகிறது. இந்தக் கண்காட்சி வரும் 15ஆம் தேதி  வரை மூன்று நாள்களுக்கு நடைபெற உள்ளது. ரோஜா கண்காட்சிக்காக பூங்காவில் 27 அடி உயரத்தில்  30 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட  மலா்களால் ஆன  ஈபிள் டவா் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும்  கால்பந்து, டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டு தொடா்பான உருவ மாதிரிகளும் மலா்களைக் கொண்டு அமைக்கும்   பணி நடைபெற்று வருகிறது.

ரோஜா கண்காட்சிக்காக 4500 ரகங்களில் 37 ஆயிரம் ரோஜா செடிகள் இங்கு வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. ரோஜா கண்காட்சியைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவா் என்பதால் அதற்கான சிறப்பு ஏற்பாடுகளைச் செய்யும் பணியில் தோட்டக் கலைத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT