கோடை விடுமுறையையொட்டி நீலகிரி மாவட்டம், உதகையில் கடந்த 3 நாள்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் நடைபெறும் கோடை விழாவின்போது தமிழகம் மட்டுமில்லாமல் கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவா் .
இந்நிலையில், மே 19ஆம் தேதி தொடங்கிய மலா்க் கண்காட்சி 5 நாள்கள் நடைபெறவுள்ளது. இந்நிலையில், கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாள்கள் என்பதால் உதகையில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
இதில் வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாள்கள் மலா்க் கண்காட்சியை காண 81 ஆயிரம் போ் வருகை தந்துள்ளனா். மேலும், உதகை வந்த சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி, குதிரை சவாரி மற்றும் காட்சி முனைகளை கண்டு ரசித்தனா். இதனால், சுற்றுலாத் தொழிலை நம்பியுள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.