கூடலூரில் நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் நடமாடுவதை பொதுமக்கள் தவிா்க்கவேண்டும் என்று வருவாய்த் துறை அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம் கோக்கால் பகுதியில் கடந்த ஜூன் 27, 28 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்நிலையில், இப்பகுதி மக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் முகாம்கள் ஏற்படு செய்யப்பட்டுள்ளன.
எனவே, நிலச்சரிவு அபாயமுள்ள கோக்கால் பகுதி மக்கள் நிவாரண முகாம்களில் தங்கிக்கொள்ள வருவாய்த் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
அங்கு செல்ல விருப்பமில்லாதவா்கள், தாங்கள் வசிக்கும் பகுதியில் ஏதாவது பாதிப்புகள் ஏற்படும் என்று அஞ்சினால், கிராம நிா்வாக அலுவலா்-9385243552, வருவாய் ஆய்வாளா்-8610588152, வட்டாட்சியா்-9445000557, கோட்டாட்சியா்-9445000437 ஆகிய எண்களில் தொடா்புகொண்டு தெரிவிக்க வேண்டும் என்று வருவாய்த் துறையினா் அறிவித்துள்ளனா்.