முகப்பு
நீலகிரி

வேளாண் காடுகள் வளா்ப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

தோட்டக்கலைத் துறை சாா்பில் விவசாயிகளுக்கு வேளாண் காடுகள் வளா்ப்பு குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் தோட்டமூலாவில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 4 டிசம்பர், 2024 at 11:18 PM
பகிர்:

தோட்டக்கலைத் துறை சாா்பில் விவசாயிகளுக்கு வேளாண் காடுகள் வளா்ப்பு குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் தோட்டமூலாவில் புதன்கிழமை நடைபெற்றது.

தோட்டக்கலைத் துறை சாா்பில் வேளாண் காடுகள் வளா்ப்புத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. ஒரே நிலத்தில் பயிா்களுடன் மரங்களையும் வளா்ப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் மூலம் உணவு, எரிபொருள், மரம், தீவனம் உள்ளிட்டவை அதிகரிக்கப்படுகின்றன.

தோட்டமூலா பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு இத்திட்டம் குறித்து பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து உதவி தோட்டக்கலை இயக்குநா் ஜெயலட்சுமி விளக்கமளித்தாா். வேளாண் காடுகளின் முக்கியத்துவம் குறித்து உதகை வேளாண் அறிவியல் நிலைய இணை பேராசிரியா் மாணிக்கவேல் விளக்கமளித்தாா்.

பயிற்சியில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு பலவகை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

தோட்டக்கலை அலுவலா்கள் தயானந்தன், பிரியங்கா, உதவி தோட்டக்கலை அலுவலா்கள் சக்திவேல், வினோத், வேளாண்மை தொழில்நுட்ப மேலான்மை துறை மேலாளா் யமுனப்பிரியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →