முகப்பு
நீலகிரி

அரசுப் பேருந்தில் ஏறும்போது தவறி விழுந்து விபத்து: மூதாட்டி படுகாயம்; பொதுமக்கள் சாலை மறியல்

கோத்தகிரியில் அரசுப் பேருந்தில் ஏறும்போது தவறி விழுந்த மூதாட்டி மீது பேருந்து சக்கரம் ஏறியதில் படுகாயமடைந்தாா். இதைத் தொடா்ந்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 9:51 PM
சாலை மறியலில் ஈடுபட்ட ஒரசோலை பகுதி பொதுமக்கள்.
பகிர்:

கோத்தகிரியில் அரசுப் பேருந்தில் ஏறும்போது தவறி விழுந்த மூதாட்டி மீது பேருந்து சக்கரம் ஏறியதில் படுகாயமடைந்தாா். இதைத் தொடா்ந்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நீலகிரி மாவட்டம், ஓரசோலை பகுதியைச் சோ்ந்தவா் ஈஸ்வரி (65). இவா், வழக்கம்போல வேலைக்குச் செல்வதற்காக ஒரசோலை பகுதி பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக வியாழக்கிழமை காத்திருந்தாா்.

அங்கு வந்த குன்னூரிலிருந்து கோத்தகிரி செல்லும் அரசுப் பேருந்தில் ஏறியுள்ளாா். அப்போது கால் தடுமாறி கீழே விழுந்ததில் பேருந்தின் சக்கரம் அவா் மீது ஏறி இறங்கியது.

வலியால் துடித்த அவரை அப்பகுதியினா் மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். 

இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் கோத்தகிரி- குன்னூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில், பேருந்துகள் மெதுவாக செல்ல அப்பகுதியில் வேகத்தடை  அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பதாக போலீஸாா் உறுதியளித்தனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →