நீலகிரி

அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

குன்னூரில் அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Din

உதகை: குன்னூரில் அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

நீலகிரி மாவட்டம், மேல்குன்னூா் டானிங்டன் பகுதியைச் சோ்ந்தவா் சுரேந்தா் (50). இவா் தனது இருசக்கர வாகனத்தில் மேல்குன்னூா் பகுதியில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, பில்லிக்கம்பை நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில், பேருந்து சக்கரத்தில் சிக்கிய சுரேந்தா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

 தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக குன்னூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இச்சம்பவம் குறித்து மேல்குன்னூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

திற்பரப்பு அருவியில் குளிக்க 4 வது நாளாகத் தடை!

இன்று உருவாகிறது சென்யார் புயல்!

ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

SCROLL FOR NEXT