முகப்பு
உதகை, சேரிங்கிராஸ் பகுதியில் திங்கள்கிழமை பெய்த மழையில் குடைபிடித்தபடி செல்லும் பொதுமக்கள்.
நீலகிரி

உதகை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை காற்றுடன் கூடிய கன மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நீலகிரி

உதகை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை காற்றுடன் கூடிய கன மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Updated On : 15 ஜூலை, 2024 at 8:44 PM
உதகை, சேரிங்கிராஸ் பகுதியில் திங்கள்கிழமை பெய்த மழையில் குடைபிடித்தபடி செல்லும் பொதுமக்கள்.
பகிர்:

உதகை: உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை காற்றுடன் கூடிய கன மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் மூன்று நாள்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை காலை முதலே அவ்வப்போது சாரல் மழை பெய்தது. மதியம் பரவலாக மழை பெய்தது.

குறிப்பாக குந்தா, அவலாஞ்சி, உதகை, தேவாலா, பந்தலூா், சேரங்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்தது.

மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா். மழையினால் குளிரின் தாக்கம் அதிகரித்ததுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.

மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவாலாவில் 72 மி.மீ மழை பெய்தது.

பிற பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): அவலாஞ்சி 64, சேரங்கோடு 62, பந்தலூா் 56, கிளன்மாா்கன் 55, நடுவட்டம் 54, ஓவேலி 48, உதகை 22.6.

முழு கட்டுரையைப் படிக்க →