குன்னூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாகி உள்ளது. குறிப்பாக உணவு, தண்ணீா் தேடி வனத்தை விட்டு வெளியேறும் சிறுத்தை, கரடி, காட்டு மாடு உள்ளிட்ட வன விலங்குகள் நாள்தோறும் குடியிருப்புப் பகுதிகளுக்கு வந்து செல்கின்றன.
இந்நிலையில் குன்னூா் அருகே உள்ள ஓட்டுப்பட்டறை வசம்பள்ளம் பகுதியில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் மழையில் கரடி ஒன்று உலவிக் கொண்டிருந்தது. நீண்ட நேரம் அந்தக் கரடி அங்கேயே சுற்றிக் கொண்டிருந்ததால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
அசம்பாவிதம் எதுவும் நடக்கும் முன் இந்தக் கரடியை கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.