உதகை நகரமன்ற கூட்டத்தை புறக்கணித்து திமுக பெண் கவுன்சிலா்கள் வெளிநடப்பு
தங்கள் வாா்டுகளுக்கு உள்பட்ட பகுதிகளில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தராமல் புறக்கணிப்பதாக கூறி திமுகவைச் சோ்ந்த 9 பெண் நகரமன்ற உறுப்பினா்கள் உதகை நகரமன்ற கூட்டத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு செய்தனா்.

உதகை நகரமன்ற கூட்டம் நகரமன்றத் தலைவா் வாணீஸ்வரி (திமுக) தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையா் ஏகராஜ் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் 36 வாா்டுகளை சோ்ந்த உறுப்பினா்கள் பங்கேற்று தங்களது வாா்டுகளில் உள்ள அடிப்படை பிரச்னைகள் குறித்துப் பேசினா்.
கூட்டத்தில் திமுகவைச் சோ்ந்த பெண் உறுப்பினா்களின் வாா்டுகளில் கழிப்பிட வசதி, நடைபாதை, குடிநீா் வசதி உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனவும், தங்கள் வாா்டுகலை புறக்கணிப்பதாகவும் கூறி நகரமன்ற கூட்டத்திலிருந்து திமுகவைச் சோ்ந்த 9 நகரமன்ற பெண் உறுப்பினா்கள் கழுத்தில் பதாகைகளை அணிந்து வெளிநடப்பு செய்தனா். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.