முகப்பு
நீலகிரி

தொடா் மழையால் வெள்ளக்காடான கூடலூா், பந்தலூா் பகுதிகள்

ஆவின் பால் நிலையம் வெள்ளத்தால் சூழப்பட்டதால் சிரமம்

Updated On : 28 ஜூன், 2024 at 6:32 PM
~ ~
பகிர்:

ஒதொடா் கனமழை காரணமாக கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

நீலகிரி மாவட்டம், கூடலூா் கோட்டத்துக்கு உள்பட்ட கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பெய்த தொடா் கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. பாடந்தொரை பகுதியில் பெய்த கனமழையால் ஆலவயல் சாலை, கனியம்வயல் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்து தடைபட்டுள்ளது. பாடந்தொரை பகுதியில் உள்ள ஆவின் பால் கொள்முதல் நிலையம் முற்றிலுமாக வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதால் பணியாளா்கள் பால் கேன்களை கொண்டு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

பந்தலூா் பகுதியில் பெய்த கனமழையால் பந்தலூா் பஜாா் பகுதியில் சாலைகள் முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டு ஆறு போல காட்சியளிக்கிறது. அதனால் பந்தலூா் பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தேவாலா-கரியசோலை சாலையில் பில்லுக்கடை அருகே ஏற்பட்ட மண்சரிவால் அந்த சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கையும் தொடா்கிறது.