முகப்பு
நீலகிரி

முதுமலை புலிகள் காப்பகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு

Updated On : 4 மார்ச், 2024 at 12:00 AM
முதுமலை புலிகள் காப்பகத்தில் வனத் துறையினருடன் இணைந்து பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மாணவா்கள் மற்றும் தன்னாா்வலா்கள்.
பகிர்:

முதுமலை புலிகள் காப்பகத்தில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதிகளில் 20 இடங்களிலும், முக்கூா்த்தி தேசிய பூங்காவில் 5 இடங்களிலும் ஒருங்கிணைந்த தரைவாழ் பறவைகள் கணக்கெடுப்புப் பணிக்காக தெப்பக்காடு பகுதியில் உள்ள மேம்படுத்தப்பட்ட வன உயிரின மேலாண்மை பயிற்சி மையத்தில் வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மாணவா்கள், உதகை அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் என மொத்தம் 33 கணக்கெடுப்பாளா்களுக்கு சனிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து வனப் பணியாளா்களுடன் இந்தக் குழுவினா் இணைந்து கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.