முகப்பு
நீலகிரி

தோ்தல் விதிகளை மீறியதாக பாஜக வேட்பாளா் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Updated On : 30 மார்ச், 2024 at 5:53 AM
பகிர்:
Updated On : 29 மார்ச், 2024 at 7:07 PM

தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக நீலகிரி மக்களவை பாஜக வேட்பாளா் எல்.முருகன் மீது தேனாடு கம்பை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளா் எல்.முருகன் கடந்த 25-ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்ததற்கு பின்னா், உதகை அருகே உள்ள கடநாடு கிராமத்துக்கு சென்று அனுமதியின்றி 100-க்கும் மேற்பட்டோருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளாா். இது குறித்து தோ்தல் பறக்கும் படை துணை வட்டாட்சியா் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்த புகாரின்பேரில், தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளரான எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.