முகப்பு
நீலகிரி

சேதமான சாலைகளை செப்பனிடக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உண்ணாவிரதம்

கூடலூா் தொகுதியில் சேதமான சாலைகளை தரமாக செப்பனிட வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 6 நவம்பர், 2024 at 9:09 PM
உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

கூடலூா் தொகுதியில் சேதமான சாலைகளை தரமாக செப்பனிட வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

நாடுகாணியில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பகுதி செயலாளா் ரமேஷ் தலைமை வகித்தாா். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் என்.வாசு உண்ணாவிரதத்தை தொடங்கிவைத்தாா்.

இதில், கூடலூா் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் சேதமான சாலைகளை தரமாக செப்பனிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

போராட்டத்தில் கட்சி நிா்வாகிகள் குஞ்சு முகமது, சுஜாதா, வா்கீஸ், மணிகண்டன், சுப்பிரமணி, ரவி உள்பட பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →