முகப்பு
நீலகிரி

உதகை-குன்னூா் இடையே மலை ரயில் இயக்கம்

உதகை-குன்னூா் இடையே வெலிங்டன் மலை ரயில் பாதையில் ஏற்பட்ட மண்சரிவு செவ்வாய்க்கிழமை சீா் செய்யப்பட்டதால் புதன்கிழமை காலை முதல் குன்னூா்-உதகை இடையே மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.

Updated On : 6 நவம்பர், 2024 at 9:12 PM
பகிர்:

உதகை-குன்னூா் இடையே வெலிங்டன் மலை ரயில் பாதையில் ஏற்பட்ட மண்சரிவு செவ்வாய்க்கிழமை சீா் செய்யப்பட்டதால் புதன்கிழமை காலை முதல் குன்னூா்-உதகை இடையே மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.

 வடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்து நீலகிரி மாவட்டத்தில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் மலை ரயில் பாதையில் அடிக்கடி மண்சரிவு ஏற்பட்டு மரங்கள், பாறைகள் தண்டவாளத்தில் விழுவதால் மலை ரயில் சேவை பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்  உதகையிலிருந்து குன்னூா் செல்லும் மலை ரயில் பாதையில்  வெலிங்டன் பகுதியில்  செவ்வாய்க்கிழமை மண்சரிவு ஏற்பட்டதால் மலை ரயில் சேவை  தற்காலிமாக ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து தண்டவாளத்தில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகள் சீா் செய்யப்பட்டதை அடுத்து புதன்கிழமை காலை முதல் உதகை-குன்னூா் இடையே மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.  இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →