உதகை மலை ரயில் சேவை இன்று(ஜன. 29) ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் பாதையில், கல்லார் - ஹில்குரோவ் ரயில் நிலையங்கள் இடையே மரங்கள் விழுந்ததால் மலை ரயில் சேவை நேற்று பாதிக்கப்பட்டது.
வானிலை ஆய்வு மையம் நீலகிரி மாவட்டத்துக்கு மழை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், நேற்று உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
இதனால், கல்லார் - ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததால் மலை ரயில்களின் போக்குவரத்து நேற்று பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து, தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், மேட்டுப்பாளையம் மற்றும் குன்னூருக்கு இடையேயான ரயில் சேவை மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்டுவதாக, சேலம் கோட்டம் ரயில்வே அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.