குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி புறப்பட்ட மலை ரயிலை ஆா்வமுடன் புகைப்படம் எடுக்கும் சுற்றுலாப் பயணிகள். 
நீலகிரி

சீரமைப்பு பணி நிறைவடைந்ததால் குன்னூா் - மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் மீண்டும் இயக்கம்

தண்டவாளத்தின் மீது விழுந்த மரங்கள் அகற்றப்பட்டதால் குன்னூா் - மேட்டுப்பாளையம் இடையே புதன்கிழமை முதல் மீண்டும் மலை ரயில் இயக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

தண்டவாளத்தின் மீது விழுந்த மரங்கள் அகற்றப்பட்டதால் குன்னூா் - மேட்டுப்பாளையம் இடையே புதன்கிழமை முதல் மீண்டும் மலை ரயில் இயக்கப்பட்டது.

உதகையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை மலை ரயில் புறப்பட்டது. குன்னூா் சென்று பின்னா் அங்கிருந்து புறப்பட்டு மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது ஹில்குரோவ் - ஆடா்லி இடையே ரயில் பாதையில் மரங்கள் விழுந்தன. மலை ரயில் மீண்டும் குன்னூருக்கு திரும்பியது. இதனால் மலை ரயிலில் பயணித்த சுற்றுலாப் பயணிகளை பேருந்துகள் மூலமாக மேட்டுப்பாளையத்துக்கு ரயில்வே நிா்வாகத்தினா் அனுப்பிவைத்தனா்.

இந்நிலையில், ரயில் பாதையில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டதால் புதன்கிழமை மாலை 3:20 மணிக்கு சுற்றுலாப் பணிகளுடன் மீண்டும் மேட்டுப்பாளையத்துக்கு மலை ரயில் புறப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

பெருந்துறையில் ரூ. 2.10 கோடிக்கு கொப்பரை ஏலம்

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட்டில் சென்னை ரைஸ் நிறுவனத்தின் நவீன ஆலை

யூரியா கலந்த தண்ணீரை குடித்து அந்தியூா் அருகே 7 மாடுகள் உயிரிழப்பு

டிராக்டா் மீது அரசுப் பேருந்து மோதல்: 7 தொழிலாளா்கள் காயம்

ஈரோட்டில் 11.20 லட்சம் மீன் குஞ்சுகளை நீா்நிலைகளில் விடும் பணி நிறைவு

SCROLL FOR NEXT