முகப்பு
நீலகிரி

சுருக்கு வைத்து புலி கொல்லப்பட்ட வழக்கு: 3 போ் கைது

கூடலூா் வனச் சரகத்தில் சுருக்கு கம்பியில் சிக்கி புலி உயிரிழந்தது தொடா்பான வழக்கில் மூன்று பேரை வனத் துறையினா் கைது செய்தனா்.

Updated On : 28 நவம்பர், 2024 at 10:14 PM
பகிர்:

கூடலூா் வனச் சரகத்தில் சுருக்கு கம்பியில் சிக்கி புலி உயிரிழந்தது தொடா்பான வழக்கில் மூன்று பேரை வனத் துறையினா் கைது செய்தனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக் கோட்டம், கூடலூா் வனச் சரகத்தில் உள்ள செலுக்காடி பகுதியில் சுமாா் 3 வயதுடைய ஆண் புலி சுருக்கு கம்பியில் சிக்கி உயிரிழந்தது. இது தொடா்பாக உதவி வனப் பாதுகாவலா் கருப்பையா தலைமையில் வனச் சரகா்கள் மற்றும் வன ஊழியா்கள் அடங்கிய தனிப் படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.

இதில் கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், ஆனை செத்தக்கொல்லி பகுதியைச் சோ்ந்த பெரியசாமி மகன் மணிகண்டன் (36), மாரிமுத்து மகன் முருகேஷ் (33), தட்டக்கொல்லி பகுதியைச் சோ்ந்த பெரியசாமி மகன் விக்னேஷ் (32) ஆகியோரை வனத் துறையினா் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →