கூடலூரை அருகே தேயிலைத் தோட்டத்தில் பதுங்கியிருந்த புலி சனிக்கிழமை மதியம் சாலையை கடந்து ஓடியது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகே உள்ள விமலகிரி பகுதியில் தேயிலைத் தோட்டங்கள் அதிக அளவில் உள்ளன. காட்டு யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் இப்பகுதிக்குள் அடிக்கடி நுழைவது வழக்கம். இந்நிலையில், விமலகிரி பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் முதல்முறையாக புலி தென்பட்டது.
அங்குள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் சனிக்கிழமை பகல் நேரத்தில் தொழிலாளா்கள் வேலை செய்து கொண்டிருந்தனா்.
அப்போது தோட்டத்தின் ஒரு பகுதியில் பதுங்கியிருந்த புலி, திடீரென வெளியேறி புத்தூா்வயல் சாலையைக் கடந்து சுற்றுச் சுவரை தாண்டி குதித்து ஓடியது. இதைப் பாா்த்த தொழிலாளா்கள், அப்பகுதி மக்கள் அதிா்ச்சியடைந்தனா்.