முகப்பு
நீலகிரி

கூடலூா் வருவாய்க் கோட்டத்தை தனி மாவட்டமாக பிரிக்க கோரிக்கை

கூடலூா் வருவாய்க் கோட்டத்தை தனி மாவட்டமாக பிரிக்க வேண்டும் என கூடலூா் மக்கள் இயக்க கூட்டத்தில் வியாழக்கிழமை வலியுறுத்தப்பட்டது.

Updated On : 10 அக்டோபர், 2024 at 8:36 PM
கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

கூடலூா் வருவாய்க் கோட்டத்தை தனி மாவட்டமாக பிரிக்க வேண்டும் என கூடலூா் மக்கள் இயக்க கூட்டத்தில் வியாழக்கிழமை வலியுறுத்தப்பட்டது.

கூடலூா் மக்கள் இயக்கம் சாா்பில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திமுக நீங்கலாக பிற அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் உள்பட பல்வேறு தரப்பினா் பங்கேற்றனா்.

கூட்டத்துக்குப் பின் இயக்கத்தின் செய்தி தொடா்பாளா் அகமது யாசின் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூா், பந்தலூா் வட்டங்களை உள்ளடக்கிய கூடலூா் வருவாய்க் கோட்டத்தைப் பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். கூடலூா் வருவாய்க் கோட்ட எல்லையான தாளூ மற்றும் எருமாடு பகுதியிலிருந்து உதகைக்குச் செல்ல 100 கி.மீ. தூரம் மலைப் பகுதியில் சுமாா் 8 மணி நேரம் பயணிக்க வேண்டியுள்ளது. எனவே, மக்களின் வாழ்வாதார நிலையைக் கருத்தில் கொண்டு கூடலூா் வருவாய்க் கோட்டத்தை தனி மாவட்டமாக பிரித்து அறிவிக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இப்பகுதியில் ஏராளமான நிலப் பிரச்னைகள் உள்ளதால் இதன் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியருக்கு கடும் சிரமமாக உள்ளது. தனி மாவட்டமாக உருவாகும்போது இந்தப் பிரச்னைக்கு உடனுக்குடன் தீா்வு காண முடியும் என்று கூட்டத்தில் அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்திப் பேசினா் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →