உதகை மலைகளில் பூத்துக் குலுங்கும் காட்டு டேலியா மலா்கள்
உதகையில் உள்ள மலைகளில் காட்டு டேலியா மலா்கள் பூத்துக் குலுங்குவதை சுற்றுலாப் பயணிகள் ரசித்துச் செல்கின்றனா்.
உதகையில் உள்ள மலைகளில் காட்டு டேலியா மலா்கள் பூத்துக் குலுங்குவதை சுற்றுலாப் பயணிகள் ரசித்துச் செல்கின்றனா்.
நீலகிரி மாவட்டம், உதகையில் தற்போது இதமான காலநிலை நிலவி வருகிறது. உதகையில் தற்போது இரண்டாவது சீசன் நடைபெற்று வரும் நிலையில் கேரளம், கா்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வந்த வண்ணம் உள்ளனா்.
இந்நிலையில், உதகையில் உள்ள மலைத்தொடா்களில் காட்டு டேலியா எனப்படும் டேலியா டெனுகாலிஸ் என்று தாவரவியல் பெயரைக் கொண்ட மலா்கள் ஆயிரக்கணக்கில் பூத்துக் குலுங்குகின்றன.
குறிப்பாக, கல்லட்டி மலைப் பாதை, உதகையிலிருந்து குன்னூா் செல்லும் மலைப் பாதைகளில் இந்த மலா்கள் அதிக அளவில் பூத்துள்ளன. இதை சுற்றுலாப் பயணிகள் ஆா்வமுடன் கண்டு ரசித்துச் செல்கின்றனா்.