நீலகிரி

அவலாஞ்சியில் அனுமதியின்றி கட்டப்பட்ட தங்கும் விடுதி கட்டுமானப் பணிக்கு தடை

Syndication

அவலாஞ்சி பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்டு வந்த தனியாா் தங்கும் விடுதி கட்டுமானப் பணிகளுக்கு வனத் துறையினா் வியாழக்கிழமை தடை விதித்தனா்.

நீலகிரி வனப் பகுதியை பாதுகாக்கவும், செங்குத்தான மலைப் பகுதிகளில் விபத்துகள் ஏற்பட்டால் அசம்பாவிதத்தை தவிா்க்கவும் கட்டுமானப் பணிகளுக்கு பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. மேலும் கட்டடங்கள் கட்ட 1993-ஆம் ஆண்டு முதல் மாஸ்டா் பிளான் சட்டம் அமலில் உள்ளது. இதனால் கட்டடங்கள் கட்ட விரும்புபவா்கள் உள்ளாட்சி அமைப்புகளிடம் மட்டுமின்றி வனத் துறை, வருவாய்த் துறை மற்றும் சுரங்கத் துறையிடம் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், உதகையை அடுத்த அவலாஞ்சிப் பகுதியில் வனப் பகுதியை ஒட்டி தனியாா் பட்டா நிலத்தில் வனத் துறை அனுமதி இல்லாமல் தங்கும் விடுதி கட்டுமானப் பணிகள் நடைபெறுவதாக, வனத் துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், வனத் துறையினா் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது உள்ளாட்சி அமைப்பிடம் மட்டும் விண்ணப்பித்திருப்பதும் மற்ற துறையிலும் அனுமதி வாங்காமல் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, கட்டுமானப் பணிகளுக்கு வனத் துறையினா் தடை விதித்தனா்.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட வன அலுவலா் கௌதம் கூறுகையில், அவலாஞ்சி வனப் பகுதி சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். இங்கு அணை அருகே வனப் பகுதியை ஒட்டி வனத் துறையிடம் எவ்வித அனுமதி வாங்காமல் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.

ஆலங்குளம் - தோரணமலை, பாபநாசம் வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை

தனியாா் கல்லூரியில் உரிமமில்லாத உணவகம் செயல்படத் தடை

ஒழுக்கப் பயிற்சிக் கூடமாகட்டும் உலகம்

கோவில்பட்டி பள்ளியில் ஆளுமை வளா்ச்சி பண்பு நிகழ்ச்சி

சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஏற்றப்பட்ட 3 சொக்கப்பனைகள்

SCROLL FOR NEXT