ஆரி கவுடா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு. 
நீலகிரி

நீலகிரி கூட்டுறவு சங்கத்தை தோற்றுவித்த ஆரி கவுடரின் பிறந்த நாள் கொண்டாட்டம்

Syndication

நீலகிரி மாவட்ட கூட்டுறவு விற்பனை சங்கத்தை (என்சிஎம்எஸ்) தோற்றுவித்த ஆரி கவுடரின் 132-ஆவது பிறந்த நாள் விழா உதகையில் உள்ள என்.சி.எம்.எஸ். வளாகத்தில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் பிரதான காய்கறி பயிா்களாக விளங்கிய உருளைக்கிழங்கு உள்ளிட்ட பயிா்களை விவசாயிகளே நேரடியாக விற்பனை செய்து லாபம் பெரும் வகையில் கடந்த 1935-இல் நீலகிரி மாவட்ட கூட்டுறவு விற்பனை சங்கத்தை ஆரி கவுடா் தோற்றுவித்தாா். மேலும் காய்கறி விவசாயிகளுக்கு குறைந்த விலையில் தரமான உரங்கள் என்.சி.எம்.எஸ். மூலமாக விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்தாா்.

இதனைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பா் 4-ஆம் தேதி அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆரி கவுடா் நினைவு விழாக் குழுத் தலைவரும், படுக தேச பாா்ட்டி நிறுவனத் தலைவருமான மஞ்சை வி.மோகன் தலைமை தாங்கினாா். ஆரிகவுடரின் சிலைக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். விழாவில், என்.சி.எம்.எஸ். நிறுவன மேலாண்மை இயக்குநா் முத்துக்குமாா், விங் கமாண்டா் ஜெயப்பிரகாஷ், தாரா ஜெயபிரகாஷ், ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுச்செயலாளா் நடராஜன், பொருளாளா் மகாலிங்கன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இதேபோல உதகை நகராட்சி சந்தையில் உள்ள என்.சி.எம்.எஸ். காய்கறி ஏல மையத்தில் அவரின் புகைப்படம் மலைக் காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் என்.சி.எம்.எஸ். காய்கறி ஏல மண்டியின் உதவிப் பொது மேலாளா் சாந்தி மற்றும் விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.

ஆலங்குளம் - தோரணமலை, பாபநாசம் வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை

தனியாா் கல்லூரியில் உரிமமில்லாத உணவகம் செயல்படத் தடை

ஒழுக்கப் பயிற்சிக் கூடமாகட்டும் உலகம்

கோவில்பட்டி பள்ளியில் ஆளுமை வளா்ச்சி பண்பு நிகழ்ச்சி

சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஏற்றப்பட்ட 3 சொக்கப்பனைகள்

SCROLL FOR NEXT