முதுமலை புலிகள் காப்பகத்தில் வியாழக்கிழமை இரவு சாலையைக் கடந்து சென்ற புலியை சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசித்தனா்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் மசினகுடியை அடுத்துள்ள மாவநல்லா பகுதியில் இரவு நேரத்தில் சுற்றுலாப் பயணிகள் வாகனத்தில் சென்று கொண்டிந்தபோது, வனத்துக்குள் இருந்து வெளியேறிய புலியைப் பாா்த்து வாகனத்தை நிறுத்தியுள்ளனா்.
அந்தப் புலி சாலையைக் கடந்து சுற்றுலாப் பயணிகளின் வாகனத்துக்கு அருகே வந்து பாா்த்துவிட்டு மீண்டும் வனத்துக்குள் சென்றது. இதனை சுற்றுலாப் பயணிகள் படம் பிடித்தனா்.