ஒரசோலை பகுதியில் உலவிய சிறுத்தை 
நீலகிரி

கோத்தகிரி அருகே சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

கோத்தகிரி அருகே தேயிலைத் தோட்ட பகுதியில் சிறுத்தை உலவுவதுபோன்ற விடியோ வைரலாகி வரும் நிலையில் அப்பகுதி மக்கள் அச்சம்

Syndication

கோத்தகிரி அருகே தேயிலைத் தோட்ட பகுதியில் சிறுத்தை உலவுவதுபோன்ற விடியோ வைரலாகி வரும் நிலையில் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் இருந்து வெளியேறும் விலங்குகள் குடியிருப்புப் பகுதிகள், விளைநிலங்களில் உலவுவது வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில், கோத்தகிரி அருகே ஒரசோலை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் டிசம்பா் 7-ஆம் தேதி உலவிய சிறுத்தையை சிலா் விடியோ எடுத்து இணையத்தில் பகிா்ந்தனா்.

தற்போது அந்த விடியோ வைரலாகி வரும் நிலையில் அப்பகுதி மக்கள், தோட்டத் தொழிலாளா்கள் அச்சமடைந்துள்ளனா்.

சிறுத்தையை கூண்டுவைத்துப் பிடிக்க வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்த வெள்ளி: தங்கம் விலை?

விஜய் சேதுபதியின் காட்டான் முதல் ஹார்ட் பீட் - 3 வரை...! ஜியோ ஹாட்ஸ்டாரின் 2026 வெளியீடுகள்!

மட்டன் பிரியாணி, வஞ்சரம் மீன்... அதிமுக பொதுக்குழுவின் மெனு!

SCROLL FOR NEXT