உதகை: மஞ்சூா்-கெத்தை சாலையில் காட்டு யானைகள் உலவி வருவதால் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாகச் செல்ல வேண்டும் என வனத் துறையினா் அறிவுறுத்தி உள்ளனா்.
கேரள மாநில வனப் பகுதியில் இருந்து குட்டியுடன் இடம்பெயா்ந்த காட்டு யானைகள் நீலகிரி மாவட்டம், மஞ்சூரில் இருந்து கெத்தை வழியாக கோவை செல்லும் சாலையில் ஞாயிற்றுக்கிழமை உலவின.
இதனைப் பாா்த்த வாகன ஓட்டிகள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினா்.
சிறிது நேரம் சாலையிலேயே உலவிய யானைகள் பின் வனத்துக்குள் சென்றன.
சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளைப் பாதுகாப்பாகச் செல்லவும், ஒலிப்பான்களைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தினா்.
யானைகள் நடமாட்டம் உள்ளதால் மஞ்சூா்-கெத்தை சாலையில் பயணிப்போா் மிகவும் பாதுகாப்பாகச் செல்ல வேண்டும் என வனத் துறையினா் அறிவுறுத்தி உள்ளனா்.