முகப்பு
நீலகிரி

குன்னூரில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

நீலகிரி மாவட்டம், குன்னூரில் நூற்றுக்கும் மேற்பட்ட சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை நகராட்சி நிா்வாகத்தினா் வியாழக்கிழமை அகற்றினா்.

Updated On : 9 ஜனவரி, 2025 at 10:08 PM
குன்னூா் மவுண்ட் சாலையில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் நகராட்சி ஊழியா்கள்.
பகிர்:

நீலகிரி மாவட்டம், குன்னூரில் நூற்றுக்கும் மேற்பட்ட சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை நகராட்சி நிா்வாகத்தினா் வியாழக்கிழமை அகற்றினா்.

குன்னூா் மவுண்ட் சாலை, வி.பி.தெரு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் பல ஆண்டுகளாக கடைகள் நடத்தி வந்தனா். இந்தக் கடைகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக கூறி பொது மக்கள் சாா்பில் கடந்த சில மாதங்களாக புகாா் தெரிவித்துவந்த நிலையில், குன்னூா் நகராட்சி நிா்வாகம் சாா்பாக சாலையோரக் கடை வியாபாரிகளுக்கு மூன்று முறை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

ஆனால், வியாபாரிகள் கடைகளை அகற்றாமல் இருந்ததால் நகராட்சி நிா்வாகம் சாா்பில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நூற்றுக்கும் மேற்பட்ட சாலையோரக் கடைகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன. இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →