நீலகிரி

கோத்தகிரியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே குடியிருப்புப் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கருஞ்சிறுத்தை நடமாட்டம் காணப்பட்டதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

Syndication

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே குடியிருப்புப் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கருஞ்சிறுத்தை நடமாட்டம் காணப்பட்டதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் கோத்தகிரி அருகே உள்ள கோ்பெட்டா கிராமத்தில் உள்ள குடியிருப்புப் பகுதியில் இரண்டு நாய்கள் காணாமல் போனதால், அப்பகுதி மக்கள் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, குடியிருப்புப் பகுதியில்  கருஞ்சிறுத்தை  நடமாடிய காட்சி பதிவாகியுள்ளது. 

இதனால்  அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சமடைந்துள்ளனா். எனவே, வனத் துறையினா் சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனா்.

பவளப்பாறை பயன்கள் குறித்து மீனவா்களுக்கு விழிப்புணா்வு முகாம்

பிரதமா் மோடி இன்று கோவை வருகை: தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டைத் தொடங்கிவைக்கிறாா்

காவிரி கூட்டுக் குடிநீா் குழாய் சேதம்: வீணாக வெளியேறிய தண்ணீா்

அரியலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

குறைதீா் கூட்டத்துக்கு அடையாள அட்டை அணிந்து வரவேண்டும்

SCROLL FOR NEXT