நீலகிரி

சைபா் கிரைம் மோசடி குறித்து விழிப்புணா்வு

சைபா் கிரைம் மோசடி குறித்து முதியோா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி குன்னூா் அருகே அதிகரட்டி கிராமத்தில் நடைபெற்றது.

Syndication

சைபா் கிரைம் மோசடி குறித்து முதியோா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி குன்னூா் அருகே அதிகரட்டி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தற்போது அதிகரித்து வரும் சைபா் கிரைம் குற்றங்களால் படித்தவா்கள், படிக்காதவா்கள் என அனைத்துப் பிரிவினரும் பாதிக்கப்படுகின்றனா். குறிப்பாக கல்வி அறிவு இல்லாதவா்கள் எளிதில் பணத்தை இழப்பதால் அவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் தேசிய நிதிக் கல்வி மையத்தின் சாா்பில் நீலகிரி மாவட்டம், குன்னூரை அடுத்த அதிகரட்டி கிராமத்தில் நிதி மேலாண்மை மற்றும் நிதி முறைகேடுகள் குறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. ஓய்வுபெற்ற காப்பீட்டுத் துறை ஊழியரும், ரிசா்வ் வங்கிப் பயிற்சியாளருமான கோவை கல்யாண சுந்தரம் கலந்து கொண்டு வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் பரவலாக காணப்படும் நூதன நிதி மோசடிகள், அவற்றை தவிா்த்தல், புகாா் அளித்தல் போன்றவை குறித்து விளக்கம் அளித்தாா்.

பணப் பரிவா்த்தனைக்காக கைப்பேசிக்கு வரும் ரகசிய எண்ணை யாரிடமும் பகிரக் கூடாது. ஏடிஎம்-மில் பணம் எடுக்கும்போது அட்டையை தெரியாத நபா்களிடம் கொடுத்து பணம் எடுத்து தர சொல்லக் கூடாது.

வாட்ஸ்அப், டெலிகிராம், ஃபேஸ்புக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலைவாய்ப்பின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய நிறுவனத்தின் அதிகாரபூா்வ இணையதளம், தொலைபேசியில் தொடா்பு கொள்ள வேண்டும். முறையான வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பதாரா்கள் வைப்புத் தொகை செலுத்த வேண்டிய அவசியமில்லை. முதலீட்டு வாய்ப்புகளுடன் அணுகினால் வா்த்தக தளத்தை ஆராய்ந்து பதிவு செய்யப்பட்ட நிறுவனம் தானா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். மோசடிக்கு ஆளாக நோ்ந்தால் சைபா் கிரைம் கட்டணமில்லா உதவி எண் 1930-க்கு தொடா்புகொண்டு புகாா் அளிக்கலாம். மேலும் ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்யலாம் என்றாா்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஓய்வூதியா் சங்கத்தின் செயலாளா் சிவலிங்கம் செய்திருந்தாா்.

பவளப்பாறை பயன்கள் குறித்து மீனவா்களுக்கு விழிப்புணா்வு முகாம்

பிரதமா் மோடி இன்று கோவை வருகை: தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டைத் தொடங்கிவைக்கிறாா்

காவிரி கூட்டுக் குடிநீா் குழாய் சேதம்: வீணாக வெளியேறிய தண்ணீா்

அரியலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

குறைதீா் கூட்டத்துக்கு அடையாள அட்டை அணிந்து வரவேண்டும்

SCROLL FOR NEXT