முதுமலை புலிகள் காப்பகத்தில் இன்று (நவ.24) புலிகள் கணக்கெடுப்புப் பணி நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு, காா்குடி, முதுமலை, நெலாக்கோட்டை ஆகிய வனச் சரகங்களில் 140 இடங்களில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு, திங்கள்கிழமை (நவ.24) காலை 11 மணிக்கு புலிகள் கணக்கெடுப்புப் பணி நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு வனச்சரகத்திலும் பாகம் 3 கண்காணிப்பு பணியில் ஈடுபடும் அனைத்து முன்களப் பணியாளா்களும் இப்பயிற்சியில் கலந்துகொள்வாா்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.