வரத்து அதிகரிப்பு காரணமாக உதகையில் மலைக்காய்கறிகள் விலை குறைந்து காணப்பட்டன.
நீலகிரியில் விளையும் மலைத்தோட்ட காய்கறிகள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பிவைக்கப்படுகின்றன,
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் காய்கறி அறுவடைப் பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளதால், சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளது.
உதகை சந்தையில் கேரட் குறைந்தபட்சம் கிலோ ரூ.25 முதல் ரூ. 50 வரை விற்பனை செய்யப்பட்டது. பீட்ரூட் ரூ.20 முதல் ரூ.45 வரையிலும் முட்டைக்கோஸ் கிலோ ரூ. 7 முதல் ரூ.13 வரையிலும், சவ்சவ் கிலோ ரூ.2 முதல் ரூ.8 வரையிலும், முள்ளங்கி ரூ.10 முதல் ரூ. 25 வரை விற்பனையானது.
கடந்த மாத விலையை ஒப்பிடுகையில் கிலோவுக்கு சராசரியாக 10 ரூபாய் வரை விலை குறைந்து காணப்பட்டது. வரத்து அதிகரிப்பால் விலைகுறைந்து காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.