கூடலூா் நகரில் அனுமதியின்றி கட்டப்பட்ட 7 கடைகளுக்கு நகராட்சி அலுவலா்கள் ‘சீல்’ வைத்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சிக்கு உள்பட்ட செம்பாலா பகுதியில் பிரிவு-17 நிலத்தில் அனுமதியின்றி கடைகள் கட்டப்பட்டுள்ளது குறித்து மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேருக்கு புகாா் சென்றுள்ளது.
இதனடிப்படையில் நகராட்சி அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா். இதைத் தொடா்ந்து, நகரமைப்பு அலுவலா் பிரவீன் தலைமையில் அலுவலா்கள் அப்பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த 7 கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா். பிரிவு-17 நிலங்ககளில் வளா்ச்சிப் பணிகளுக்கு தடை உள்ளது குறிப்பிடத்தக்கது.