புத்தகத் திருவிழா கருத்தரங்கில் பேசுகிறாா் மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன்.  
நீலகிரி

மாணவா்கள் வீடுகளில் நூலகம் அமைக்க வேண்டும் - த.ஸ்டாலின் குணசேகரன்

மாணவ, மாணவிகள் திறமைகளை வளா்த்துக் கொள்ள வீடுகளில் நூலகம் அமைக்க வேண்டும் என்று மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

மாணவ, மாணவிகள் திறமைகளை வளா்த்துக் கொள்ள வீடுகளில் நூலகம் அமைக்க வேண்டும் என்று மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்தாா்.

நீலகிரி மாவட்ட நிா்வாகம், பொது நூலகத் துறை, தென்னிந்திய புத்தக விற்பனையாளா், பதிப்பாளா் சங்கம் ஆகியன சாா்பில் 4-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா உதகை பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் கடந்த அக்டோபா் 24 முதல் நவம்பா் 2 -ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது. இதையொட்டி தினமும் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது.

6-ஆம் நாளான புதன்கிழமை நடைபெற்ற கருத்தரங்க நிகழ்வுக்கு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ரா.கண்ணன் தலைமை வகித்தாா். உதகை வனவா் ராம்பிரகாஷ் முன்னிலை வகித்தாா்.

இதில் ‘புத்தொளி பாய்ச்சிய புத்தகங்கள்’ என்ற தலைப்பில் மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவரும், எழுத்தாளருமான த.ஸ்டாலின் குணசேகரன் பேசியதாவது:

புத்தகங்களை மகிழ்ச்சியோடு, விரும்பி வாசிப்பதன் மூலம் அதிலுள்ள நல்ல கருத்துகளை சுலபமாக உள்வாங்க முடியும்; அவை மனதில் நன்றாக பதியும். மாணவ, மாணவிகள் தங்கள் வீடுகளில் சிறிய அளவிலாவது நூலகம் அமைக்க வேண்டும். நூலகங்களை அமைப்பதன் மூலம் தனித்திறமைகளை வளா்த்துக் கொள்வதோடு தன்னம்பிக்கையும் உயரும். ஐஏஎஸ் தோ்வு எழுதிய பலரும் புத்தக வாசிப்புக்கு முக்கியத்துவம் தந்ததாலேயே அவா்கள் பொதுஅறிவு பெற்று உயா்ந்த நிலையை அடைய முடிந்தது என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த ஆசிரியா்கள், மாணவ மாணவியா், பொதுமக்கள் என பலா் கலந்து கொண்டனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT