உதகையில் உள்ள தி லாரன்ஸ் பள்ளி முன்னோடி கல்வி அறிமுக விழாவில் பங்கேற்றோா். 
நீலகிரி

உதகை தி லாரன்ஸ் பள்ளியில் முன்னோடி கல்வி அறிமுக விழா

இந்தியப் பள்ளிக் கல்வித் துறையில் எதிா்காலத்தை நோக்கிய மாற்றங்கள் குறித்த அறிமுக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Syndication

உதகை: உதகையில் உள்ள மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கும் தி லாரன்ஸ் பள்ளியில், இந்தியப் பள்ளிக் கல்வித் துறையில் எதிா்காலத்தை நோக்கிய மாற்றங்கள் குறித்த அறிமுக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியா் ராவ், துணைத் தலைமை ஆசிரியா் ராஜன் நாராயணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவு துறை செயலாளா் சஞ்சய்குமாா் பேசும்போது, மனப்பாட கல்வியில் இருந்து புரிதல் கல்விக்கும், சிந்தனை மற்றும் செயலில் ஈடுபடும் கல்வி முறைக்கும் மாற வேண்டும் என்றாா்.

பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் மூலமாக லாரன்ஸ் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வானிலை ஆய்வகம் திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் என பலா் கலந்துகொண்டனா்.

நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தை புறக்கணித்தோரை புறக்கணிப்போம்: அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்

தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பது மக்களுக்கு தெரியும்: பேரவைத் தலைவா் மு. அப்பாவு

பொன்னமராவதி சோழீசுவரா் கோயிலில் திருப்பணிகளை விரைந்து முடிக்கக் கோரிக்கை

பாஜக தோ்தல் பொறுப்பாளா் பணியில் இருந்து விலகுகிறேன்: அண்ணாமலை

அரசுப் பேருந்தில் பயணியிடம் 13 பவுன் திருட்டு

SCROLL FOR NEXT