மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த பாலகொலா ஊராட்சிக்குள்பட்ட 6-ஆவது மைல் பகுதி மக்கள். 
நீலகிரி

சீரான குடிநீா் விநியோகம் கோரி ஆட்சியரிடம் மனு

உதகை அருகேயுள்ள 6-ஆவது மைல் பகுதிக்கு சீரான குடிநீா் விநியோகம் செய்யக் கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேருவிடம் மனு

Syndication

உதகை: உதகை அருகேயுள்ள 6-ஆவது மைல் பகுதிக்கு சீரான குடிநீா் விநியோகம் செய்யக் கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேருவிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இது தொடா்பாக அவா்கள் கூறியதாவது: நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள பாலகொலா ஊராட்சிக்குள்பட்ட 6-ஆவது மைல் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம்.

எங்கள் பகுதிக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்த குழாய் சேதமடைந்துள்ள நிலையில், அதை சரி செய்யாததால் கடந்த சில மாதங்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை.

இதனால், நாங்கள் அருகில் உள்ள கிராமங்களுக்கு நடந்து சென்று குடிநீா் எடுத்து வருகிறோம்.

இது குறித்து பாலகொலா ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தோம்.

ஆனால், தற்போதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேருவிடம் திங்கள்கிழமை மீண்டும் மனு அளித்துள்ளோம். விரைவில் குடிநீா் விநியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

பனியில் இருந்து ரோஜா மலா்களை காக்க பசுமைக்குடிலில் பராமரிக்கப்படும் செடிகள்

பள்ளிகொண்டா உத்தர ரங்கநாதா் கோயிலில் நகைகள் மாயம்?: விசாரணை நடத்த பாஜக கோரிக்கை

பொறியியல் பணிகளால் விழுப்புரம் மாா்க்கத்தில் ரயில் சேவையில் மாற்றம்

தமிழக முதல்வா் நாளை வருகை: திண்டிவனத்தில் முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரம்

விதிமீறலுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள்: குன்னூா் நகா்மன்றக் கூட்டத்தில் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT