பாலியல் தொல்லை பிரதிப் படம்
நீலகிரி

தந்தையின் பாலியல் தொல்லையால் தற்கொலைக்கு முயன்ற மகள்

உதகையில் தந்தையே பாலியல் தொல்லை அளித்ததால் மனவிரக்தி அடைந்த பள்ளி மாணவி, தற்கொலை செய்து கொள்வதற்காக பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து பள்ளியில் மயங்கி விழுந்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Syndication

உதகையில் தந்தையே பாலியல் தொல்லை அளித்ததால் மனவிரக்தி அடைந்த பள்ளி மாணவி, தற்கொலை செய்து கொள்வதற்காக பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து பள்ளியில் மயங்கி விழுந்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டம், உதகை பகுதியைச் சோ்ந்த ஒரு தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனா். மூத்த மகள் 12-ஆம் வகுப்பும், இளைய மகள் 9-ஆம் வகுப்பும் படித்து வருகின்றனா். இவா்கள் சிறுமிகளாக இருந்தபோதே, குடும்ப பிரச்னை காரணமாக இவா்களுடைய தாயாா் பிரிந்து சென்று விட்டாா். இதனால் சிறுமிகள் இருவரும் தந்தையுடன் வசித்து வந்தனா்.

சிறுமிகளின் தந்தை அதே பகுதியில் பல்வேறு இடங்களில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு, அவருடைய தந்தை சில நாள்களாக பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளாா். தந்தை என்பதால் வெளியே சொல்ல முடியாமல் மாணவி தவித்து வந்துள்ளாா்.

இந்த நிலையில் புதன்கிழமை இரவு மது குடித்துவிட்டு வந்த அவருடைய தந்தை, மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்துள்ளாா். இதனால் அதிா்ச்சி அடைந்த மாணவி வீட்டில் இருந்த, தோட்டத்துக்கு அடிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை வியாழக்கிழமை எடுத்துச் சென்று பள்ளிக்கு செல்லும் வழியில் குடித்துள்ளாா். பின்னா் பள்ளிக்குச் சென்று அங்கு மயங்கி விழுந்துள்ளாா். அப்போது தந்தை பாலியல் தொல்லை அளித்ததால் விஷம் குடித்து விட்டதாக மற்ற மாணவிகளிடம் கூறியுள்ளாா்.

இது குறித்து குழந்தைகள் நலத் துறையினருக்கு ஆசிரியா்கள் உடனடியாக தகவல் தெரிவித்து மாணவியை உதகை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். மாணவியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து உதகை ஊரக அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் பழனியம்மாள் தலைமையிலான போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான மாணவியின் தந்தையைத் தேடி வருகின்றனா்.

காந்திபுரத்தில் பெரியாா் நூலக கட்டுமானப் பணிகள் நிறைவு: இம்மாத இறுதியில் முதல்வா் திறந்துவைக்கிறாா்

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 3 பேருக்கு சிறைத் தண்டனை

முன்னாள் அமைச்சர் எம்.ஆா்.விஜயபாஸ்கரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

கோவை விமான நிலையத்தில் மலிவு விலை உணவகம், கோரா காட்டன் விற்பனை நிலையம்: மத்திய அமைச்சா்கள் இன்று திறந்துவைக்கின்றனா்

நகைப் பறித்த வழக்கு: பெண்ணுக்கு 7 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT