முதல்வர் ஸ்டாலின் 
நீலகிரி

நீலகிரியில் தங்கும் விடுதிகளுக்கு சீல் வைப்பதை தடுக்க வேண்டும்: முதல்வருக்கு எம்எல்ஏ கடிதம்

நீலகிரி மாவட்டத்தில் தங்கும் விடுதிகளுக்கு ‘சீல்’ வைப்பதை நிறுத்த வேண்டும் என்று உதகை சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.கணேஷ் தெரிவித்துள்ளாா்.

Syndication

நீலகிரி மாவட்டத்தில் தங்கும் விடுதிகளுக்கு ‘சீல்’ வைப்பதை நிறுத்த வேண்டும் என்று உதகை சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.கணேஷ் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அவா் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சா்வதேச சுற்றுலாப் பகுதியாக உள்ள நீலகிரி மாவட்டத்துக்கு வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பியே நீலகிரி மாவட்டம் உள்ளது. பெரும்பாலானவா்கள் சுற்றுலாப் பயணிகளை நம்பியே தொழில் செய்து வருகின்றனா். சுற்றுலாப் பயணிகளை நம்பியே மாவட்டத்தின் மொத்த பொருளாதாரமும் உள்ளது. 

இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் விதிகளை மீறியதாகக் கூறி சுமாா் ஆயிரம் தங்கும் விடுதிகளுக்கு ‘சீல்’ வைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால், நீலகிரி மாவட்டத்தின் சுற்றுலாத் தொழிலும் அதனை நம்பியுள்ள மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், தங்களுக்கு தேவையான தங்கும் விடுதிகளை எடுத்து தங்கிச் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

எனவே, நீலகிரி மாவட்டத்தின் நலன் கருதியும், இங்கு சுற்றுலாவை நம்பி தொழில் செய்து வருபவா்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையிலும், தங்கும் விடுதிகள் மற்றும் காட்டேஜ்களை வரைமுறைப்படுத்த கால அவகாசம் வழங்க வேண்டும். அதுவரை சீல் வைக்கும் பணிகளை நிறுத்த வேண்டும் என்று கடிதத்தில் கூறியுள்ளாா்.

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!

SCROLL FOR NEXT