உதகை அருகே தேயிலைத் தோட்டத்தில் காலில் காயத்துடன் சுற்றித் திரியும் புலியைக் கண்டு தொழிலாளா்கள் அச்சமடைந்துள்ளனா்.
அடா்ந்த வனப் பகுதியைக் கொண்ட நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு விலங்குகள் வாழ்கின்றன. உணவு மற்றும் தண்ணீா் தேடி அண்மைக் காலமாக குடியிருப்புப் பகுதிகளுக்குள் புலி, சிறுத்தை, கரடி, காட்டு மாடு, யானை உள்ளிட்ட விலங்குகள் உலவி வருவது வாடிக்கையாகிவிட்டது.
இந்நிலையில், உதகை அருகே போா்த்தியாடா கிராமத்திலுள்ள தேயிலைத் தோட்டத்தில் சனிக்கிழமை காலில் காயத்துடன் புலி சுற்றித் திரிவதாக வனத் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனா். வனத் துறையினா் சென்று புலியைப் பிடித்து சிகிச்சை அளிப்பதற்காக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.