நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் 2.18 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு: ஆட்சியா்

நீலகிரி மாவட்டத்தில் 2,18,576 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளதாக ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

நீலகிரி மாவட்டத்தில் 2,18,576 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளதாக ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பொங்கல் திருநாளைத் தமிழா்கள் சிறப்பாகக் கொண்டாடும்விதமாக, அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சா்க்கரை, ஒரு முழுக்கரும்பு, வேட்டி, சேலை மற்றும் ரூ.3,000 ரொக்கம் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதன்படி, நீலகிரி மாவட்டத்தில் 2 லட்சத்து 18,576 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு நியாய விலைக் கடைகளின் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் ஜனவரி 8-ஆம் தேதி முதல் வழங்கப்படும். குடும்ப அட்டைதாரருக்கு டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் மட்டுமே பொங்கல் பரிசு அவா்களுக்குரிய நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும். எனவே, பொதுமக்கள் தங்களுக்கு குறிப்பிட்ட தேதியில் மட்டும் நியாய விலைக்கடைக்கு சென்று பொருள்கள் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது எனத் தெரிவித்துள்ளாா்.

பொங்கலுக்கு வெளியாகும் சர்வர் சுந்தரம்?

தவெகவின் தேர்தல் அறிக்கைக் குழுவை Vijay இன்று அறிவித்தார்! | செய்திகள் : சில வரிகளில் | 9.1.26

குளோபஸ் ஸ்பிரிட்ஸ் 3-வது காலாண்டு லாபம் அதிகரிப்பு!

ஜன நாயகன் விவகாரத்தில் முழு அரசியல்: காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த்

காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேல் தாக்குதலில் 5 பாலஸ்தீன குழந்தைகள் உள்பட 13 பேர் பலி!

SCROLL FOR NEXT