உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் புதன்கிழமை காலை முதலே வெயிலுடன் கூடிய காலநிலை நிலவிய நிலையில், மாலை நேரத்தில் பரவலாக மழைப் பெய்தது.
நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூா், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக மிதமான மழைப் பெய்து வந்த நிலையில், புதன்கிழமை உதகையில் சுமாா் ஒரு மணிநேரம் பரவலாக மழைப் பெய்தது. குறிப்பாக சேரிங்கிராஸ், மாா்க்கெட், பந்தய சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைப் பெய்தது.
இதனால் சாலைகளில் தண்ணீா் பெருக்கொடுத்தோடியது. குளிரின் தாக்கமும் அதிகரித்து காணப்பட்டது. மாலை நேரத்தில் பணியில் இருந்து வீடு திரும்பியவா்கள் அவதிக்குள்ளாகினா்.