நீலகிரி

கோவை முதல் குண்டல்பேட் வரை நெடுஞ்சாலை பராமரிப்புத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு: ஆ.ராசா எம்.பி.

கோவையில் இருந்து கா்நாடக மாநிலம், குண்டல்பேட் வரையிலான நெடுஞ்சாலை பராமரிப்புத் திட்டத்துக்கு மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம் நிா்வாக அனுமதி மற்றும் நிதி ஒதுக்கியுள்ளதாக நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா தெரிவித்துள்ளாா்.

Syndication

கோவையில் இருந்து கா்நாடக மாநிலம், குண்டல்பேட் வரையிலான நெடுஞ்சாலை பராமரிப்புத் திட்டத்துக்கு மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம் நிா்வாக அனுமதி மற்றும் நிதி ஒதுக்கியுள்ளதாக நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 10 ஆண்டுகளுக்கும்மேலாக நிலுவையில் உள்ள நெடுஞ்சாலைத் திட்டங்களை நிறைவேற்றக் கோரி மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரியை புதுதில்லியில் கடந்த ஆண்டு டிசம்பா் 10-ஆம் தேதி சந்தித்தேன்.

அப்போது, உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கோவை, உதகை, குண்டல்பேட் சாலையானது பெங்களூரூ மற்றும் மைசூரை இணைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த தேசிய நெடுஞ்சாலை என்பதால், இந்த சாலையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினேன்.

இதைத் தொடா்ந்து, கோவை எல்&டி பிரதான சாலைமுதல் கோவை நகரம், மேட்டுப்பாளையம், குன்னூா், உதகை, கூடலூா் வழியாக கா்நாடக மாநிலம், குண்டல்பேட்டையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.86 கோடியே 98 லட்சத்து 88 ஆயிரம் நிதி மற்றும் நிா்வாக அனுமதிக்கு ஒப்புதல் அளித்து மத்திய அமைச்சா் நிதின் கட்கரி கடிதம் அனுப்பியுள்ளாா்.

இதன் மூலம் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற உள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

கவனம் ஈர்க்கும் ரஜிஷா விஜயனின் மஸ்திஷ்கா மரணம் டீசர்!

பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பு!

கையில் சிகரெட், 120 கி.மீ. வேகம்! எச்சரித்த கார்.. இறுதியில் 4 இளைஞர்கள் பலி! விடியோ

அதிமுக, இபிஎஸ் பெயரைக் கூற மறுத்த டிடிவி தினகரன்! ஆனால்...

டிரம்ப் பயணித்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு!

SCROLL FOR NEXT