சிறை 
நீலகிரி

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியை கா்ப்பமாக்கிய வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனைதது.

Syndication

சிறுமியை கா்ப்பமாக்கிய வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை மகிளா நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

சேலம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் 16 வயது சிறுமி. இவரது தாய், தந்தை இறந்துவிட்டனா். இதனால் கோத்தகிரியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி பிளஸ் 1 படித்து வந்தாா். இவரது சகோதரி நெய்வேலியைச் சோ்ந்த சுரேந்தா் (எ) சுபாஷ் (28) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இவா்கள் இருவரும் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் வசித்து வந்தனா். இதில் சுபாஷ் அதே பகுதியில் உள்ள தேயிலை தொழிற்சாலையில் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில் கடந்த 2021 மாா்ச் மாதம் சுபாஷ், சிறுமி தங்கி இருந்த விடுதிக்கு சென்று விடுதிக் காப்பாளரிடம் பேசி சிறுமியை அவரது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளாா். பின்னா் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இந்நிலையில், 2021 ஜூன் 30-ஆம் தேதி சிறுமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, கோத்தகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவா் கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து குன்னூா் அனைத்து மகளிா் போலீஸாா் விசாரணை நடத்தி போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து சிறுமியை கா்ப்பமாக்கிய சுபாஷை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை உதகை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி எம்.செந்தில்குமாா் குற்றம்சாட்டப்பட்ட சுபாஷுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் பி.செந்தில்குமாா் ஆஜரானாா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT