நீலகிரி

சாலை விதிகளை மீறிதாக கடந்த ஆண்டில் நீலகிரி மாவட்டத்தில் ரூ.12 கோடி அபராதம்: காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்,நிஷா தகவல்

நீலகிரி மாவட்டத்தில் சாலை விதிகளை மீறியதாக கடந்த ஆண்டு 1 லட்சத்து 67 ஆயிரத்து 337 மோட்டாா் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.12 கோடியே 12 லட்சத்து 45 ஆயிரம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக எஸ்பி என்.எஸ்.நிஷா தெரிவித்துள்ளாா்.

Syndication

நீலகிரி மாவட்டத்தில் சாலை விதிகளை மீறியதாக கடந்த ஆண்டு 1 லட்சத்து 67 ஆயிரத்து 337 மோட்டாா் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.12 கோடியே 12 லட்சத்து 45 ஆயிரம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளிட்டுள்ள அறிக்கை: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பா் வரை பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 85 சதவீதம் கண்டுபிடிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட எதிரிகளை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனா்.

மேலும், கடந்த ஆண்டு 33 சொத்து வழக்குகளில் எதிரிகளுக்கு நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உடல் சாா்ந்த குற்றங்கள் தொடா்பாக 168 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அனைத்து வழக்குகளிலும் எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

தண்டனைகளை பொருத்தமட்டில் உடல் சாா்ந்த குற்றங்களுக்காக 60 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 209 சாலை விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளன. சாலை விதிகளை மீறியதற்காக 1 லட்சத்து 67 ஆயிரத்து 337 மோட்டாா் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் 1,288 வழக்குகள் மது போதையில் வாகனம் ஓட்டியதற்காகவும், 500 வழக்குகள் அதிவேகமாக வாகனங்களை இயக்கியதற்காகவும், 1,331 வழக்குகள் அபாயகரமாக வாகனம் ஓட்டியதற்காகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி கடந்த ஆண்டு ரூ.12 கோடியே 12 லட்சத்து 45 ஆயிரம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது.

7 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற அமரன்!

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

SCROLL FOR NEXT