முகப்பு
திருப்பூர்

சேலத்தில் பாஜக மாநில நிர்வாகி ஆடிட்டர் ரமேஷ் வெட்டிக் கொலை

சேலத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் வி. ரமேஷ் (52), வெள்ளிக்கிழமை இரவு மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

திருப்பூர்

சேலத்தில் பாஜக மாநில நிர்வாகி ஆடிட்டர் ரமேஷ் வெட்டிக் கொலை

சேலத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் வி. ரமேஷ் (52), வெள்ளிக்கிழமை இரவு மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

சேலத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் வி. ரமேஷ் (52), வெள்ளிக்கிழமை இரவு மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

சேலம் மரவனேரி முதலாவது குறுக்குத் தெருவில் குடும்பத்துடன் ரமேஷ் வசித்து வந்தார். வெள்ளிக்கிழமை இரவு குடும்பத்துடன் உணவகத்துக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். மனைவி, குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு, தனது வாகனத்தை மரவனேரி 2-ஆவது குறுக்குத் தெருவில் உள்ள அலுவலகத்தில் விடுவதற்குச் சென்றார்.

அப்போது ரமேஷின் அலுவலக வளாகத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள், அவரைக் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்தனர். ரமேஷ் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை இரவு 10 மணிக்கு அக்கம் பக்கத்தினர் பார்த்து, அவரது குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, பாஜகவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்தக் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் சம்பவ இடத்தில் திரண்டனர்.

தகவல் அறிந்து, மாநகரக் காவல் துணை ஆணையர் ஏ.ஜி.பாபு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு விரைந்து வந்தனர்.

ரமேஷ் உடலை போலீஸார் எடுக்க முயற்சித்த போது அதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், அவர்களைச் சமாதானம் செய்து, ரமேஷின் உடலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸார் எடுத்துச் சென்றனர்.

பாஜக புகார்: ரமேஷுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் இருந்து வந்ததாகவும், அவருக்கு போலீஸார் பாதுகாப்பு வழங்கத் தவறி விட்டதாகவும் பாஜகவினர் குற்றம்சுமத்தினர்.

சோதனைச் சாவடிகளுக்கு சீல்: இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்மக் கும்பல் தப்பி ஓடிவிடாமல் இருக்க, சேலம் மாநகரில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. மாநகரின் முக்கிய இடங்களில் எவ்வித அசம்பாவிதச் சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மரவனேரி பிரதான சாலையில் பாஜகவினர் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த இரு அரசுப் பேருந்துகள் கல்வீசித் தாக்கப்பட்டன. இதனால், சேலம் மாநகரம் முழுவதும் பதற்றம் நிலவுகிறது. கொலை செய்யப்பட்ட ஆடிட்டர் ரமேஷுக்கு சுபா என்ற மனைவியும், பிளஸ் 1 படிக்கும் ஸ்மிருதி என்ற மகளும் உள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →