முகப்பு
திருப்பூர்

17 இல் சண்டீகரில் லங்கடி சாம்பியன் போட்டி:தமிழக ஆடவர், மகளிர் அணி பங்கேற்பு

சண்டீகரில் வரும் 17 முதல் 19 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் 5 ஆவது தேசிய சீனியர் லங்கடி சாம்பியன் போட்டியில்(நொண்டி அடித்துத் தொடுதல்) தமிழக ஆடவர், மகளிர் அணியினர் பங்கேற்க உள்ளனர்.

Updated On : 12 மே 2013, 6:36 am IST
பகிர்:

சண்டீகரில் வரும் 17 முதல் 19 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் 5 ஆவது தேசிய சீனியர் லங்கடி சாம்பியன் போட்டியில்(நொண்டி அடித்துத் தொடுதல்) தமிழக ஆடவர், மகளிர் அணியினர் பங்கேற்க உள்ளனர்.

 தமிழ்நாடு மாநில லங்கடி கழகம் திருப்பூரை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இச்சங்கம் சார்பில் லங்கடி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு 5 ஆவது தேசிய சீனியர் லங்கடி சாம்பியன் போட்டிக்கு வீரர்கள், வீராங்கனைகள் தயார் செய்யப்பட்டுள்ளனர்.

 சண்டீகரில் வரும் 17 முதல் 19 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இப்போட்டியில் தமிழக ஆடவர் அணியில் 15 வீரர்கள், மகளிர் அணியில் 15 வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். 

Advertisement

Advertisement

  திருப்பூர், திருச்சி, கரூர், மதுரை, ராமநாதபுரம், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த லங்கடி வீரர்கள், வீராங்கனைகள் இப்போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு திருப்பூரில் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிலையில், லங்கடி அணி வீரர்கள், வீராங்கனைகளுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 இதில், திருப்பூர் பெரியாயிபாளையம் திருவள்ளூவர் அரசு மேல்நிலைப் பள்ளிச் சேர்ந்த லங்கடி பயிற்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு சீருடைகளை  மாநில லங்கடி கழகத் தலைவர் சீகல் துரைசாமி வழங்கினார்.

 மாநில லங்கடி கழக செயல் தலைவர் ஜெயசித்ரா எம்.சண்முகம், சேர்மன் டி.பி.முத்துசாமி,  பொருளாளர் என்.கே.பாலசுப்பிரமணியம், பொதுச்செயலாளர் ஆர்.முத்துசாமி, மாவட்ட லங்கடி கழகத் தலைவர் சன்வின்குமார், உடற்கல்வி ஆசிரியர் ராஜன் உள்ளிட்டோர் லங்கடி வீரர்கள், வீராங்கனைகளுக்கு வாழ்த்துத் தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.