திருப்பூர்

விவசாயிகளுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் போராட்டம்

DIN

விவசாயிகளுக்கு ஆதரவாக உடுமலையில் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடுமலை அரசு கலைக் கல்லூரியில் சுமார் 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை கல்லூரிக்கு வந்த இவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு வெளியே வந்தனர். தமிழகத்தில் மீத்தேன் வாயு திட்டம்,  ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆகியவற்றால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதால் மத்திய, மாநில அரசுகள் இந்தத் திட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்,  இதற்காக போராடியவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

SCROLL FOR NEXT