திருப்பூர்

நாட்டுக்கோழி வளர்க்க இலவச பயிற்சி

DIN

நாட்டுக்கோழி வளர்ப்புக் குறித்த இலவச பயிற்சி திருப்பூரில் புதன்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து கால்நடை மருத்துவ பல்கலை. பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கால்நடை மருத்துவப் பல்கலை. பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் மாதந்தோறும் கால்நடை வளர்ப்பு குறித்து விவசாயிகள், பொதுமக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.  அந்த வகையில்,  நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி  திருப்பூரில் ஜூலை 12-ஆம் தேதி (புதன்கிழமை)
நடைபெறுகிறது.
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்க உள்ள இப்பயிற்சியில்,  திருப்பூர் மற்றும் சுற்றுப்புற விவசாயிகள் பங்கேற்கலாம்.
நாட்டுக்கோழி வளர்ப்பில் உள்ள விஞ்ஞான முறைகள்,  வர்த்தக வாய்ப்புகள் குறித்து இப்பயிற்சியில் தெரிவிக்கப்படும். விவரங்களுக்கு 0421-2248524 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT