திருப்பூர்

சீராகக் குடிநீர் விநியோகம் செய்ய கோரி பொது மக்கள் சாலை மறியல்

DIN

சீரான குடிநீர் விநியோகம் செய்யக் கோரி திருப்பூரில் பொது மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 90 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருப்பூர், செவந்தாம்பாளையம், சிவசக்தி நகர் பகுதியில் கடந்த 15 நாள்களாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் கடும் அவதிக்குள்ளான அப்பகுதி மக்கள் சீராக குடிநீர் விநியோகிக்கக் கோரி திருப்பூர்,  காங்கயம் சாலையில், மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறியதாவது:
எங்கள் பகுதியில் குடிநீர் விநியோகம் செய்து 15 நாள்களுக்கும் மேலாகிறது. அதற்கு முன் குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட போதும் குறைந்த நேரமே விநியோகம் செய்யப்பட்டது. தற்போது டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவி வரும் நிலையில், மாநகரில் குறைந்தபட்சம் 3 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், எங்கள் பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை.
இதனால், நாங்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறோம். எனவே, குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தி சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, சீராக குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து, பொது மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு, கலைந்து சென்றனர்.
இந்நிலையில், இந்த மறியல் சம்பவம் தொடர்பாக 90 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் கொலை: கணவா் உள்பட இருவா் கைது

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

களக்காடு உப்பாற்றில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

கழுகுமலை கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT