திருப்பூர்

திருப்பூரில் சிற்றுந்து கண்ணாடி உடைப்பு

DIN

திருப்பூரில் சிற்றுந்தின் பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, காவல் துறையினர் கூறியதாவது:
திருப்பூர், கஞ்சம்பாளையத்தில் இருந்து வீரபாண்டி நோக்கி ஞாயிற்றுக்கிழமை இரவு சிற்றுந்து சென்று கொண்டிருந்தது. அதை உடுமலை, பாப்பான்குளத்தைச் சேர்ந்த அன்பரசு (23) ஓட்டிச் சென்றார்.
ஊத்துக்குளி சாலை, இரண்டாவது ரயில்வே கேட் அருகே சிற்றுந்தை நிறுத்தி பயணிகள் ஏற்றிக் கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது, அங்கு வந்த ஒருவர் திடீரென்று சிற்றுந்தின் பின்பக்கக் கண்ணாடி மீது கல்வீசித் தாக்கியுள்ளார். இதில், பின்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது. பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சப்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் வருவதற்குள் அந்த நபர் தப்பிச் சென்றுவிட்டார்.
இதுகுறித்து, அன்பரசு அளித்த புகாரின் பேரில், திருப்பூர் வடக்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐஷருடன் டிவிஎஸ் எஸ்சிஎஸ் ஒப்பந்தம்

கொலை முயற்சி வழக்கில் மல்யுத்த வீரா் கைது

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

SCROLL FOR NEXT