திருப்பூர்

இ.எஸ்.ஐ. மருத்துவமனை திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

திருப்பூரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனைத் திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

DIN

திருப்பூரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனைத் திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் பல்வேறு கட்சி நிகழ்வுகளில்  பங்கேற்பதற்காக திருப்பூருக்கு புதன்கிழமை வந்தார்.  அப்போது, அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் ஆளும் கட்சி இரண்டாகப் பிரிந்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர்களின் மனநிலைக்கு ஏற்ப ஆட்சியாளர்கள் ஆட்சியை  நடத்துவார்கள் என்பதே எங்களது கருத்தாக உள்ளது.
தொழில் நகரமான திருப்பூரில் அரசு மருத்துவமனையில் பராமரிப்பு என்பது மிகவும் மோசமாக உள்ளது. அரசு மருத்துவமனையை உடனடியாக சீர்செய்ய வேண்டும். திருப்பூரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைக்கும் திட்டம் நிலுவையிலேயே உள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இத்திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும். இந்நகரில் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணவும், சாலைகளைச் சீர் செய்யவும் மாநகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை விமான நிலையத்தில் இன்று 71 இண்டிகோ விமானங்கள் ரத்து

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

SCROLL FOR NEXT